சோமனூர் தீப்பெட்டி மில் ரோடு, காந்தி நகரில் உள்ள ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, முன் மண்டபம் மற்றும் சுற்றுசுவர் கட்டுதல், பரிவார தெய்வங்களுக்கு கோவில் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கடந்த, 5 ம்தேதி மாலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. 6 ம்தேதி மாலை, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல் முடிந்து முதல்கால ஹோமம் நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால ஹோமம், பூர்ணா குதி நடந்தது. பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், கோவிலை சுற்றி மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. 8:00 மணிக்கு, ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.