Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் காஞ்சி மஹா பெரியவர் ... குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் குட்டியாண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
எழுத்தின் அளவு:
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா

பதிவு செய்த நாள்

08 செப்
2025
12:09

சோழவந்தான்; சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற ஏடு எதிரேறிய விழா நடந்தது.


திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து சமணர்களுடன் சொற்போர் நிகழ்த்தினார். மன்னரின் வெப்பு நோய் நீங்க பாசுரம் பாடியும், அனல்வாதத்தில் வென்றும், புனல்வாதம் புரிந்தார். வைகை ஆற்றில் விடப்பட்ட வாழ்க அந்தணர் எனும் திருப்பாசுர ஏடு மதுரையில் இருந்து வைகை நீரை எதிர்த்து நீந்தி வந்து திருவேடகத்தில் வந்து நின்று வாதத்தில் வென்றது ஐதீகம் ஆகும். இந்நிகழ்வை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் இங்கு விழா நடக்கிறது. இந்தாண்டும் வழக்கம் போல் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு விழா நடந்தது. வழக்கமாக மாலையில் நடைபெறும் விழா, சந்திர கிரகணத்தை முன்னிட்டு காலையில் நடந்தது. நாயன்மார்களுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்பு வாதத்தில் வென்ற விநாயகர், திருஞானசம்பந்தர் சப்பரத்திலும், குலச்சிறை நாயனார் குதிரை வாகனத்திலும் கோயிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள், தேவாரப் பாடல்கள் பாடப்பட்டன. சிறிய சப்பரத்தில் ஏடு வைக்கப்பட்டு வைகை ஆற்றில் விடப்பட்டு ஏடு எதிரேறிய நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் சரவணன் ஏற்பாடுகளை செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar