Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திண்டிவனம் முருகன் கோவிலில் பூஜை ... திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமான பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
மதுரையில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமான பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 செப்
2025
12:09

மதுரை; மதுரை அழகர்கோவில் அருகே பொய்கைக்கரைப் பட்டியில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமான திருப்பணிகள் தொடங்கின.


மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம் சார்பில் காஞ்சி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு பொய்கைக்கரைப்பட்டியில் கோயில் கட்டப்பட உள்ளது. மலை அடிவாரத்தில், அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே சிட்டி பால்ஸ் என்ற இடத்தில் இக்கோயில் அமைய உள்ளது. வாஸ்து, பூர்வாங்க பூஜைகள் முடிந்தநிலையில், அரசின் தடையில்லா சான்று உட்பட அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. ஆலயம் கட்டுமானத் திருப்பணி நேற்று துவங்கியது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். காலையில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையில் 11 வேத விற்பன்னர்கள் பூமி நிர்மாண ஸ்தாபிதம், தேவதா பிரார்த்தனை, மஹன்யாசம், ருத்ர பாராயணம், அர்ச்சனை, விசேஷ ஹோமம், பூஜை, அபிஷேகங்கள் செய்தனர். ஆடிட்டர் சேது மாதவா தலைமை வகித்தார். மதுரை மங்கையர்க்கரசி மில்ஸ் சேர்மன் கண்ணப்ப செட்டியார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கினார். நந்தினி ரியல் எஸ்டேட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.ஆர். பிரபு, மகா பெரியவா குரூப்ஸ் சேர்மன் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பிராமண சமாஜ மாவட்ட தலைவர் ரவி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், குழந்தைகள் நல டாக்டர் குமார் வெங்கடேசன், வழக்கறிஞர் கார்த்திக், சோழவந்தான் செல்வராணி, இண்டேன் காஸ் ஏஜன்சி உரிமையாளர் மணிகண்டன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், எழுத்தாளர் ஆதவன், ஸ்தபதி பாஸ் கரன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ‘‘இறைவனுடைய அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு அனைத்து ... மேலும்
 
temple news
பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக ... மேலும்
 
temple news

தேய்பிறை சஷ்டி செப்டம்பர் 14,2025

கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news

தேய்பிறை பஞ்சமி பூஜை செப்டம்பர் 14,2025

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar