Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை மகா காளியம்மன் கோவிலில் ... திருப்போரூர் கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை திருப்போரூர் கெங்கையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரம் கட்டுமான பணி டிசம்பருக்குள் முடியும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரம் கட்டுமான பணி டிசம்பருக்குள் முடியும்

பதிவு செய்த நாள்

11 செப்
2025
05:09

மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு நிலை ராஜகோபுரம், டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும், என, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி தெரிவித்தார்.


கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இது ஹிந்து சமயம் அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும். கோவிலுக்கு வார நாட்களில், நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, கடைகள் ஏலம் விடுவதன் வாயிலாக, ஒரு ஆண்டுக்கு, 8 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் கோவிலில் திருப்பணிகள் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. இதை அடுத்து கோவிலில் சுற்று பிரகார மண்டபம், மதில் சுவர், நடைபாதை மண்டபம், முடி காணிக்கை மண்டபம், நவீன கழிப்பிடம் என, 14 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போன்று கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள், துரிதமாக நடைபெற்று வருகின்றன.


இது குறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறியதாவது: வனபத்ரகாளியம்மன் கோவிலில், 5.30 கோடி ரூபாய் செலவில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுர திருப்பணிகள், உபயதாரர்கள் வாயிலாக நடைபெறுகின்றன. இதுவரை ராஜகோபுரத்தில் ஆறு நிலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஏழாவது நிலை கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. கோபுரத்தின் ஏழு நிலைகளும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். சுற்றுப்பிரகார மண்டபத்தில் சிமெண்ட் பூச்சுகள் பூசும் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து திருப்பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோபுர கட்டுமான பணிகளை, தினமும் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar