உசிலம்பட்டி: ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் ஆரோக்கிய மாதா கோயில் 45வது ஆண்டு திருவிழா நடந்தது. கணவாய் அடிவாரத்தில் உள்ள செட்டியபட்டியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாதா சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருச்சி தமிழக ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழு செயலர் மரிய மைக்கேல், மதுரை ரயில்வே காலனி பங்குப் பணியாளர் தேவதாஸ், ஜெயசீலன், புனித வளனார் சபை சகோதரிகள் பங்கேற்றனர். ஊர்வலம் முடிவில் ஆரோக்கிய மாதா கோயிலில் சிறப்பு திருப்பலி நடந்தது. உசிலம்பட்டி பங்குப் பணியாளர் இக்னேசியஸ் ஸ்டாலின் ஒருங்கிணைத்தார்.