Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க ... மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பதிவு செய்த நாள்

15 செப்
2025
10:09

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், திருப்பூர், ஈரோடு கரூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.


திண்டுக்கல்லில் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வ விநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில், பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மிளகு ,தேங்காய், வெள்ளைப்பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர். ரெட்டியார்சத்திரம் : கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செம்பட்டி : கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar