Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் கரி வரதராஜ பெருமாள் ... திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு திண்டுக்கல் கோயில்களில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க தடை ஹிந்து முன்னணி கோரிக்கை
எழுத்தின் அளவு:
கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க தடை ஹிந்து முன்னணி கோரிக்கை

பதிவு செய்த நாள்

15 செப்
2025
10:09

திருப்பூர்; ‘கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க அனுமதியில்லை என்ற அறிவிப்பை கைவிட வேண்டும்’ என, ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 


ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கோவை, வட மதுரையில் பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், கோவில் உட்பிரகார மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம் போன்றவை இசைக்க அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது. இசையால் இறைவனை எழுந்தருள செய்வது, உறங்க செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்கிறது. இவற்றை போற்றி வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை, அழித்து வருவது வேதனைக்குரியது. ஹிந்து கோவில்களின் பாரம்பரியங்களை ஒவ்வொன்றாக அழிக்க நினைக்கும் தமிழக அரசு தன் நிலைபாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறை பழக்கங்களை மாற்றக்கூடாது; இசைவாத்தியங்கள் முழங்க தடை செய்யக்கூடாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


வெளியில் தாராளமாக வாசிக்கலாம் விருந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஷாலினி கூறுகையில், ‘‘இந்த அறிவிப்பு, 2024 அக்., மாதம் வைக்கப்பட்டது. ஆகம விதிப்படி கோவிலில், இதுபோன்று இசைவாத்தியங்களை வாசிக்கக்கூடாது. சுற்றுபிரகாரத்தில் வாசிக்கும் போது, பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதற்கு முன் இருந்த செயல் அலுவலரிடம் பக்தர்கள் அளித்த புகாரில், இந்த அறிவிப்பு வைக்கப்பட்டது. தேவையில்லாமல், சிலர் இதை தற்போது கிளப்பி விடுகின்றனர். பழமையான கோவில் உள்ளிட்ட காரணங்களால் உட்புறம் அனுமதியில்லை. வெளியில் தாராளமாக வாசிக்கலாம்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar