பதிவு செய்த நாள்
25
டிச
2012
11:12
ஈரோடு: பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர், தம்பிராட்டி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நாளை திருக்கொடியேற்றம் நடக்கிறது.கடந்த, 9ம் தேதி கிராமசாந்தியுடன் துவங்கிய விழாவில், இன்று குதிரை துலுக்கு கேட்டல், அம்மை அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (26ம் தேதி) ஊர் அபிஷேகமும், திருக்கொடியேற்றமும் நடக்கிறது. வரும், 27ம் தேதி மாவிளக்கு வழிபாடு, பொங்கல் திருவிழா, அன்னதானம் ஆகியவையும், 28ம் தேதி, மறுபூஜை, மஞ்சள் நீர், அம்மன் ஊர்வலம் ஆகியவையும் நடக்கிறது.