பதிவு செய்த நாள்
02
அக்
2025
08:10
புதுச்சேரி; பிள்ளைச்சாவடி, இ.சி.ஆர்., கமல சாய்பாபா கோவிலில், சீரடி சாய்பாபாவின் 107ம் ஆண்டு மகா சமாதி தின வழிபாடு இன்று நடந்தது. இதையொட்டி, காலை கொடியேற்றம், மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, கலச அபிஷேகம் மற்றும் 108 பன்னீர் குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வேல்முருகன், அன்பரசி ஜெயகுமார் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், பல்லக்கு உற்சவம், சாய் சத்சரித பாராயணம், சாய் நாமஜெபம் மற்றும் ஜோதி வழிபாடு நடந்தது. பின், சாய் பக்தர்களால் எழுதப்பட்ட ‘சீரடி சாய்பாபாவின் நாமாவளிகள்’ பூமியில் அர்ப்பணம் செய்தல், ஆரத்தி மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது.