பழவேரி; பழவேரி மலை மீது முருகன் கோவில் கட்டுமானப் பணி நடக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பாலாற்றங்கரையில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவேரி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், பழமையான மலை குன்று உள்ளது. பழவேரி மலை உச்சியின் ஒரு பகுதியில் பாறை கல்லில் தடம் பதிந்த ஒரு சுவடு காணப்படுகிறது. அது முருகபெருமானின் காலடி சுவடு என நம்பும் அப்பகுதியினர், கார்த்திகை மாதம், கிருத்திகை நாளில், தீபவிளக்கு ஏற்றி முன்னோர் வழிபட்டு வருகின்றனர். அப்பகுதியில் முருகன் கோவில் கட்டி வழிபட அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர். அதன்படி, பழவேரி மலை உச்சியில் பழவேல் முருகன் சன்னிதி ஏற்படுத்த கடந்த ஆண்டு ஜனவரியில் பல்வேறு பூஜைகளுடன் கோவில் கட்டுமானப் பணி துவங்கியது. தற்போது உற்சவருக்கான கருவறை மற்றும் மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.