சிங்கம்புணரி கூவானை ஐயனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2025 11:10
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
மதுரை மாவட்ட எல்லையான கூவானை மலை அடிவாரத்தில் பூரனை, புட்காலை சமேத கூவானை ஐயனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி வழிபாட்டை முன்னிட்டு நேற்று புரவியெடுப்பு திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக 15 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டப்பட்டு பிடிமண் கொடுக்கப்பட்டது. இதைப்தொடர்ந்து புரவி பொட்டலில் வைத்து 2 பெரிய புரவிகளும், 2 சிறிய புரவிகளும் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று புரவி ஊர்வலம் துவங்கிய நிலையில் சந்திவீரன் கூடம் வந்தடைந்த புரவிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு வீரையா கோயில் வழியாக புரவிகள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.