திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2025 11:10
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள் தரிசனம் செய்தார்.
காரைக்கால், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனிபகவான் சன்னிதானத்தில் நேற்று முன்தினம் ருத்ராபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில், தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு யாகத்துடன் ருத்ராபிஷேகம் நடந்தது. தருமபு ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், சனி பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தார். அப்போது, சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் ராஜசேகரன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.