குமாரபாளையம்; குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வெள்ளிக்கிழமை நாளையொட்டி, குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள் உள்பட பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.