ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருத்தலம் திருக்கூடலையாற்றூர். இங்குள்ள நர்த்தன வல்லபேசுவரர் கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் உண்டு. ஞானசக்தியம்மன், பராசக்தியம்மன் ஆகியோர்தான் அந்த தெய்வங்கள். இந்தத் தெய்வச் சன்னதிகளில் முறையே குங்குமமும் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுகிறது.