கார்த்திகை அனுஷம்; காஞ்சி மகா பெரியவர் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2025 12:11
கோவை; கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் காஞ்சி மகா பெரியவரின் திருவுருவ சிலைக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீப ஒளியில் மகா பெரியவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் சுவாமி சுவாமிநாதன் சொற்பொழிவு நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.