முன்னதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று வியாழன் மாலை திருமலை வந்தார். திருமலையில் உள்ள ஸ்ரீ பத்மாவதி ஓய்வு இல்லத்திற்கு வந்த அவரை ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோவில் வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. கோயில் குருக்கள் பாரம்பரியமான இஸ்திகாபல் வரவேற்பை வழங்கினார். ஆந்திராவின் அறக்கட்டளை அமைச்சர் அனம் ராம்நாராயண் ரெட்டியும் ஸ்ரீவாரி தரிசனத்திற்காக ஜனாதிபதியுடன் சென்றார். கருவறைக்குள் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் மூலவரை பிரார்த்தனை செய்த பிறகு, அவருக்கு சேஷ வஸ்திரம் வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ரங்கநாயகுலா மண்டபத்தில் வேதசிர்வசனமும் வழங்கப்பட்டது. பின்னர், நாட்டின் முதல் குடிமகனுக்கு தீர்த்த பிரசாதங்கள், ஸ்ரீவாருவின் உருவப்படம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேவஸ்தான அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் பனபகா லட்சுமி, ஜானகி தேவி பானுபிரகாஷ் ரெட்டி, சி வெங்கையா சவுத்ரி, CVSO ஸ்ரீ முரளிகிருஷ்ணா, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர், எஸ்பி சுப்பராயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்த ஜனாதிபதி பிரகாரம் வலம் வந்து மக்கள் நலன் வேண்டி பிரார்த்தனை செய்தார்.