பதிவு செய்த நாள்
20
அக்
2025
06:10
கள்ளக்குறிச்சி: கோமதி அம்மன் உடனுறை சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் சுவாமிக்கு தீபாவளி சிறப்பு பூஜை நடந்தது.
கள்ளக்குறிச்சி நீலமங்கலம் பெருவங்கூர் சாலையில் உள்ள கோமதி அம்மன் உடனுறை சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் சங்கரலிங்கனார், கோமதி அம்மன், முருகன், விநாயகர், துர்கை அம்மன், கால பைரவர், நவக்கிரக சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலில் ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் குருபூஜை, சித்திரை மாதத்தில் சதய நட்சத்திரத்தில் திருநாவுக்கரசு சுவாமி குருபூஜை, மாதாந்திர பிரதோஷ வழிபாடு, நவராத்திரி பூஜை, 9 நாள் ஆன்மிக சொற்பொழிவு, தேவாரம், திருவாசகம் விண்ணப்பத்துடன் அன்னதானம் நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளிலும் துர்க்கை அம்மனுக்கு ராகு கால சிறப்பு வழிபாடு, பஜனையும் நடக்கிறது. ஆவணி சதுர்த்தியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அனைத்து கிருத்திகை, சஷ்டி நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இங்கு அவ்வப்போது திருவாசக முற்றோதலும், அகத்தியர் ஆருடம் டெலிபதி பிரசன்னமும் சொல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகையொட்டி நேற்று சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.