பதிவு செய்த நாள்
20
அக்
2025
06:10
கள்ளக்குறிச்சி: கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடிசித்துாரில் 17 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பிரகன்நாயகி சமேத விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விருத்தகிரீஸ்வரர், பிரகன்நாயகி அம்மன், நடராஜர், பெருமாள், விநாயகர், வள்ளி தெய்வாணை முருகன், காசி விஸ்வநாதர், லிங்கோத்பவர், பெருமாள், ஐய்யப்பன், ஆஞ்சநேயர், பிரம்மா, துர்கை, சனீஸ்வரர், நவகிரக சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு, நடராஜருக்கு ஓராண்டிற்கு ஆறு கால அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகளை கோவில் அர்ச்சகர் வெங்கடேச குருக்கள் செய்து வைத்தார்.