Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி மாரியம்மன் கோவிலில் கேதார ... இருமுடி கட்டி.. 18 படி ஏறி சபரிமலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் இருமுடி கட்டி.. 18 படி ஏறி சபரிமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடலரசன் கோட்டையில் ஒலித்த ‘சலங்கை’
எழுத்தின் அளவு:
ஆடலரசன் கோட்டையில் ஒலித்த ‘சலங்கை’

பதிவு செய்த நாள்

22 அக்
2025
11:10

ஆ டல் கலையே அற்புதமானது தான்; அதுவும், இறைவனால் உருவாக்கப்பட்ட பரதக்கலை என்பது, புனிதமிக்கது; பாரம்பரியம் நிறைந்தது. பரதக்கலையை அரங்கேற்றுவது, அதனை கற்றுத்தேர்ந்த கலைஞர்களுக்கு பெருமிதம், பூரிப்பு தரக்கூடிய ஒன்று. அதுவும், ஆடல் கலைகளின் அரசன் சிவபெருமான் குடிகொண்டிருக்கும், நாட்டிய நகரமான சிதம்பரம் நடராஜ பெருமான் சந்நதியிலேயே அரங்கேற்றுவது என்பது, இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என்பதில் மிகையில்லை.


கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பை, அவிநாசி சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூட மாணவியர் பெற்றனர். கலைக்கூட ஆசிரியை தேவிகா தலைமையில், 31 மாணவியர், சிதம்பரம் சென்று, நடராஜ பெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்தி, ஆன்மிகத்தில் திளைத்தனர். புஷ்பாஞ்சலியில் துவங்கி, மிஸ்ர அலாரிப்பு, நடேச கவுத்துவம், கீர்த்தனை, பதம், சப்தம், திருவாசகம், தில்லானா என, 8 நடனமாடி, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலை ஓய்வு பெற்ற உதவி பேராசிரியர் கிருஷ்ணராஜ், நட்டுவாங்கம் புரிய, இணை பேராசிரியர் குமார் பாடினார். பேராசிரியர் கமலக்கண்ணன், மிருதங்கம் இசைத்தார். முத்துக்குமரன், வயலின்; ராஜேந்திரன், மோர்சிங் வாசித்தனர். மாணவியருடன் இணைந்து, சிவன் மேல் பாடப்பெற்ற கீர்த்தனைக்கு நடனமாடிய, சலங்கை நிருத்யாலயா ஆசிரியை தேவிகா வடிவேல் கூறியதாவது:


ஆய கலைகள், அறுபத்து நான்கு என்பர். இதில், பரதநாட்டியக்கலை என்பது, பாரம்பரியமும், பண்பாடும் நிறைந்த ஒரு கலை. பிற கலைகள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது; ஆனால், பரதக்கலை என்பது, இறைவனால் உருவாக்கப்பட்டு, அவனால் ஆடப்பட்டது என்பது ஐதீகம். பரதக்கலை வளரவும், பண்பாடு வளரவும் இக்கலையை தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறோம்; மாணவிகளும் ஆர்வமுடன் பயின்று, அரங்கேற்றம் நிகழ்த்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சலங்கை நிருத்யாலயா பரத நாட்டியப்பள்ளி தாளாளர் வடிவேல், சிதம்பரம் நடராஜ பெருமான் கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்.,17ம் தேதி காலை 7:45 மணி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு வரும் பக்தர்கள், 16 கால் மண்டபம், சன்னிதி ... மேலும்
 
temple news
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா, பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar