வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா; வாடாமல்லி அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2025 02:10
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.
ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா, கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக துவங்கியது. தினசரி வெவ்வேறு அலங்காரத்தில் உற்சவர் முருகன் எழுந்தருளினார். இன்று 4ம் நாளில் உற்சவர் முருகன், வாடாமல்லி அலங்காரத்தில் எழுந்தருளினார். நாளை மஞ்சள் சாத்தி அலங்காரம் நடக்க உள்ளது. அதை தொடர்ந்து மாலை, 4:00 மணி அளவில் உற்சவர் முருகன், வல்லம் சடையீஸ்வரர் கோவிலில் சக்திவேல் பெறும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை மறுதினம் எலுமிச்சை மாலை அலங்காரமும். மாலை, 5:30 மணிக்கு சூரசம்ஹாரமும், 28 ம்தேதி திருக்கல்யாண உத்சவமும் நடக்க உள்ளது.