Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் ... உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவ நிறைவு விழா உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடையில் மணவாள மாமுனிகள் அவதார வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடையில் மணவாள மாமுனிகள் அவதார வைபவம்

பதிவு செய்த நாள்

27 அக்
2025
01:10

காரமடை; வைணவத்தில் ஆச்சாரியார்களில் முக்கியமானவர் மணவாள மாமுனிகள். இவர் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார். இதனை கொண்டாடும் வகையில் அனைத்து வைணவ திவ்ய தேசங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த வைபவம் காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக நடந்தது. 


அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் முடிந்து கால சந்தி பூஜையை  தொடர்ந்து மணவாள மாமுனி உற்சவர் ஸ்ரீ ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார் அங்கு புண்யா வசனம் கலச ஆவாஹனம் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் நெய், தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனி உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேலதாளம் முழங்க ரெங்க மண்டபத்தில் மணவாள மாமணி உற்சவர் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதரிடம் இருந்து மாலை பரிவட்டம் சடாரி மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஸ்தல தார்கள் ஸ்ரீ வேதவியாச பட்டர், திருமலைநல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்தத்தில் உபதேசரத்தினமாலை பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் மணவாள மாமுனிக்கு சடாரி மரியாதை மலர்மாலை மரியாதை அணிவித்து திருக்கோவில் வலம் வந்து ராமானுஜர் சன்னதியை அடைந்தார். பின்பு உச்சி கால பூஜை சற்றுமரை மங்கள ஆரத்தி தீர்த்த பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் அதிகாரிகள் அறங்காவலர்கள் பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar