அவிநாசி; தெக்கலூர் கோவிந்தாபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகிரி பெருமாள்,ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து கோவிலுக்கு சென்றனர்.
அவிநாசி தாலுகா, தெக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட செங்காளிபாளையம் அருகே கோவிந்தாபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகிரி பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் (ஞாயிறு) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து கோவிலுக்கு சென்றனர். இன்று விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், வாஸ்துசாந்தி, மூலமந்திர ஹோமம், கலாகர்ஷனம் ஆகியவை நடைபெற்றது. நாளை கோபுர கலசம் வைத்தல், வேதிகார்ச்சனை, மங்கள திரவியாஹீதி, தத்வார்ச்சனை உள்ளிட்டவை நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை, 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அழகிரி பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணி குழுவினர், செங்காளிபாளையம், கோவிந்தாபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.