நிலக்கோட்டை: நிலக்கோட்டை நடராஜர் கோயில் கோபுர திருப்பணி யாகத்துடன் துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட நடராஜர் கோயில் பிரகார பணிகள் கடந்த ஓராண்டாக நடந்தன. கோபுர திருப்பணிகள் அஸ்த்தரா யாகத்துடன் நேற்று முன் தினம் துவங்கியது. திருப்பணிக்குழு தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார். அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, திருப்பணிக்குழு உறுப்பினர்கள் மணியன், டாக்டர் செல்வராஜ், உதயகுமார், சதீஸ்குமார், பாலசுப்பிரமணியன், செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நடராஜர் கோயில் செயல்அலுவலர் அறிவழகன், எழுத்தர் பாஸ்கர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.