பதிவு செய்த நாள்
31
டிச
2012
10:12
சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை நடை, திறக்கப்பட்டது. மண்டல பூஜை முடிந்து, டிச., 26 இரவு 11 மணிக்கு, சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பின், மகரவிளக்கு பூஜைக்காக, நடை திறக்கப்பட்டது. மல்சாந்தி தாமோதரன் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். விசேஷ பூஜைகள் நடக்கவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு, நடை திறந்து நிர்மால்ய தரிசனத்துக்கு பின், நெய் அபிஷேகம் தொடங்கி, ஜன., 18 காலை 10 மணிக்கு நிறைவு பெறும். தினமும் உஷ, உச்ச, அத்தாழ பூஜைகள், புஷ்பாபிஷேகம் நடக்கும். மகர விளக்குக்கு முன்னோடியாக அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் "எருமேலி பேட்டை துள்ளல், ஜன., 11 ல் நடக்கும். மறுநாள் மதியம், பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படும்; ஜன., 14 மாலை, மகரவிளக்கு பெருவிழா நடக்கும். மண்டல கால பூஜையின் கடைசி நான்கு நாட்கள், அதிக கூட்டத்தால் போலீசார் சிரமப்பட்டனர். தற்போது, கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டு, தேவையான அளவு அப்பம், அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.