Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி திருஆவினன்குடி கோயிலில் கோபுர ... திருமலையில் கீதா ஜெயந்தி; நாதநீராஜனம் வேதிகையில் கீதா பாராயணம் திருமலையில் கீதா ஜெயந்தி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாடே அனைத்திலும் சக்தி வாய்ந்தது; சிருங்கேரி ஜகத்குரு உபதேசம்
எழுத்தின் அளவு:
வழிபாடே அனைத்திலும் சக்தி வாய்ந்தது; சிருங்கேரி ஜகத்குரு உபதேசம்

பதிவு செய்த நாள்

02 டிச
2025
10:12

டில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள்,, ‘விஜய யாத்திரை – 2025’ன் நிறைவு அருளாசி வழங்கினார்.


அவரது அருளுரை: ஒரு மனிதனின் கையில் உள்ள ஐந்து விரல்களும் தங்களுக்குள் சண்டையிட துவங்கின. தங்களுக்குள் யார் மற்றவர்களை விட மேலானவர் என்று அறிய விரும்பின. அதற்காக, பிரம்மாவை அணுகினர். வீண் சர்ச்சையைத் தவிர்க்க விரும்பிய பிரம்மா,நேரடியாக ஒரு தீர்ப்பை வழங்கவில்லை. ஒவ்வொரு விரலிடமிருந்தும் கருத்து கேட்டார்.


கருத்து சொன்ன விரல்கள் கட்டை விரல், ‘நான் சக்தியை குறிக்கிறேன். நான் இல்லாமல், கைக்கு அதிகப் பயனே இருக்காது. நானே மேலானவன்’ என்றது. ஆள்காட்டி விரல், ‘நான் அதிகாரத்தைக் குறிக்கிறேன். என் விரல் உயர்த்தப்படும்போது, அது அதிகாரத்தின் வெளிப்பாடு என்பதை உலகம் அங்கீகரிக்கிறது. எனவே, நானே மேலானவன்’ என்றது. நடுவிரல், ‘நான் உயர்ந்த நிலையை குறிக்கிறேன். அரசனைப் போல நான் மையத்தில் அமர்ந்திருக்கிறேன். இருபுறமும் இரண்டு விரல்கள் என நான்கு விரல்களாலும் நான் திறமையாகத் தாங்கப்படுகிறேன்’ என்றது. மோதிர விரல், ‘நான் செல்வத்தைக் குறிக்கிறேன். விலைமதிப்பற்ற உலோகங்களும், விலைமதிப்பற்ற கற்களும் என் மீது மட்டுமே அலங்கரிக்கப்படுகின்றன’ என்றது. சுண்டுவிரல் தாத்பர்யம் சுண்டு விரலோ, ‘நான்கு விரல்கள் கூறியதைப் போல, எனக்கு எந்தவிதமான பவுதிக பலமும் இல்லை; சக்தியும் இல்லை. அதிகாரமும் இல்லை, ஸ்தானமும் இல்லை, செல்வமும் இல்லை. நான் இவை அனைத்திலிருந்தும் வெகு தொலைவில் இருக்கிறேன். எந்த விரல் மேலானது என்ற இந்த விவாதத்தில் நான் ஈடுபடவில்லை. ஆனாலும், ஒரு நல்ல காரணத்துக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.


இந்த உலகமே, பெருமைகளை துறந்துவிட்டு, கடவுளைப் பிரார்த்திக்கவும், கரம்கூப்பி வணங்கி நிற்கும் போதும், வணக்கத்திற்குரிய கரத்தின் முதலாவதாக இணைவது நான்தான். அந்த கைங்கரியத்தில் நானும் ஒருவனாக இருக்க எனக்கு அருளியதற்காக நன்றி’ என்றது. எ து உயர்வானது எனவே, கடவுளிடம் செலுத்தும் வழிபாடுகள், ஆன்மிக முயற்சிகளால் கிடைக்கும் அருளும், ஆசிகளும், உலகப் பற்றுதல் தரும் எந்தவொரு ஈடுபாட்டையும் விட சக்தி வாய்ந்தவை; மற்ற எல்லாவற்றையும் விட உயர்வானது.  இவ்வாறு, சுவாமிகள் அருளாசி வழங்கினார்.   – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழாவின் மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச., 8 கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சன்னதி கோபுர கலசங்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கீதா ஜெயந்தியை முன்னிட்டு, திருமலை ஸ்ரீவாரி கோயிலுக்கு எதிரே உள்ள நாதநீராஜனம் வேதிகையில், ... மேலும்
 
temple news
திருத்தணி.: திருத்தணி ஒன்றியம் தாடூர் கிராமத்தில் உள்ள யோகீஸ்வரி சமேத கடலீஸ்வரர் சுவாமி கோவிலின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar