விருதகிரிஸ்வரர் கோவில் எதிரில் விநாயகரை வணங்கிய பசுமாடு; பக்தர்கள் மெய்சிலிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2025 03:12
விருத்தாசலம்; விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள இரண்டாம் படை வீடான ஆழத்து விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாரானை நடந்தது. ராஜஅலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி மஞ்சள், வெற்றிலை, அருகம்புல், எருக்கன் பூ மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. இதேபோல், விருதகிரிஸ்வரர் கோவில் எதிரில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. அப்போது. அங்கு வந்த பசுமாடு ஒன்று விநாயகரை மண்டியிட்ட வணங்கி நின்றது. இதை கண்ட பக்தர்கள் பரவசத்துடன் வணங்கி சென்றனர்.