மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். நேற்று காலை அறநிலையத்துறை துணை ஆணையர் பிரதீபா, மடப்புரம் கோயில் செயல் அலுவலர் கவிதா, ஆய்வர் இசக்கி செல்வம், கண்காணிப்பாளர் பாஸ்கரன் கோயில் ஊழியர்கள், பக்தர் சபையினர், பள்ளி மாணவ, மாணவியர் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 36 லட்சத்து, 65 ஆயிரத்து 464 ரூபாய் ரொக்கமும், கோசாலை உண்டியலில் 73 ஆயிரத்து 15 ரூபாய் ரொக்கமும், 240 கிராம் தங்கம், 312.800 கிராம் வெள்ளியும், அமெரிக்கா,சிங்கப்பூர்,குவைத், மலேசியா கரன்சி 22 நோட்டுகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.