கடலுார்: பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி நேற்று காலை பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ந டந்தது. மாலை மகா மண்டபம் எதிரில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், நெய், தேன், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவானுக்கு பல வகை வண்ண மலர்கள், வில்வ மாலை மற்றும் அருகம்புல் மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல, நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உட்பிரகார உலாவாக வந்து அருள்பாலித்தார்.