Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுாரில் இருந்து பழநிக்கு ... கிருஷ்ணனின் பதற்றம்; காதலின் தவிப்பு லேகா பிரசாத்தின் நடனத்தில் கச்சிதம் கிருஷ்ணனின் பதற்றம்; காதலின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 சத்ய சாய்பாபாவின் அற்புதங்களுடன் ஜன., 20 முதல் அனந்தா வெப் தொடர்
எழுத்தின் அளவு:
 சத்ய சாய்பாபாவின் அற்புதங்களுடன் ஜன., 20 முதல் அனந்தா வெப் தொடர்

பதிவு செய்த நாள்

23 டிச
2025
12:12

சென்னை: சத்ய சாய் பாபாவின் அற்புதங்களை விளக்கும், அனந்தா வெப் தொடர், அடுத்த மாதம், 20ம் தேதி, ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.


சத்ய சாய் பாபாவின் அருளால், ஐந்து பேரின் வாழ்க்கையில் நடந்த அற்புதம், வெப் தொடராக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்தத் தொடரை, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மேலாண் அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் மேற்பார்வையில், டாடா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார். தேவா இசையமைக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். 


விழாவில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது: இது, மிகவும் அற்புதமான நிகழ்ச்சி. கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன், பாடலாசிரியர் பா.விஜய், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என, போனில் கேட்டார். நான் அவரின் எழுத்து மற்றும் அரசியல் திறமைகளை வியந்து பேசிக் கொண்டிருந்த போதே, அவரிடமே பேசுங்கள் என்றார். அப்போது, கருணாநிதி முதல்வராக இருந்தார். அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். அவரை சந்தித்ததும், பாட்ஷா படத்தை வெகுவாக பாராட்டி விட்டு, தன் கதை, வசனத்தில் இயக்கும் வாய்ப்பை அளித்தார். அப்போது, தினமும் காலை, 4:00 முதல் 6:00 மணிக்குள் வசனத்தை வாசிப்பார். கதை நகரும் சூழலை விவரிப்பார். ஒரு இடத்தில், இன்னும் சிறப்பாக இருக்கலாமே என்றேன். அவர், ஒரு இயக்குநர் தான் படத்தின் ஆணி வேர் எனக்கூறி, என் கருத்துக்களையும் அனுமதித்தார். பா.விஜய் நடிப்பில் இளைஞன் படம் தயாரான போது, கருணாநிதி மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இன்னொரு நாள், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் போனில் அழைத்து, சங்கமம் படத்தை வியந்து பாராட்டினார். தற்பாது, அனந்தா தொடரின் டீசரை, அவரது மனைவி துர்கா வெளியிட்டுள்ளார். இந்த தொடர், பக்தி இழையோடும் படமாகவும், வெப் தொடராகவும் இருந்தாலும், இது, பெரிய திரைக்கு ஏற்ற வகையில், விறுவிறுப்பு குறையாமல் எடுக்கப்பட்டுள்ளது. இது, பாபாவின் அருளால் நிகழ்ந்துள்ளது. அவரது பக்தர்கள், இதை பார்க்கும் போது, அவரையே தரிசித்த உணர்வை பெறுவர். உண்மையான அன்பு, மனிதாபிமானம், அனைவருக்கும் உதவும் குணம் உள்ளிட்ட, சாய்பாபாவின் உயர்ந்த போதனைகளை, இந்த படம் வெளிப்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், நடிகர்கள் தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar