164 ஆண்டுகளாக திருவண்ணாமலை தீபத்திற்கு அனுப்பப்படும் காஞ்சிபுரம் மலர் மாலைகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2026 04:11
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் கட்டப்பட்ட மலர் மாலைகளை, காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் 164வது ஆண்டாக நேற்று அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று நடக்கிறது. இவ்விழாவிற்காக காஞ்சிபுரம் காந்தி சாலை, ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் 500 கிலோ பூக்கள் மூலம் கட்டப்பட்ட மலர் மாலைகள் காஞ்சிபுரத்தில் இருந்து எடுத்துசெல்லப்பட்டு திருவண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 164வது ஆண்டாக காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 500 கிலோ பூக்கள் மூலம் கட்டப்பட்ட மலர் மாலைகள் நேற்று அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திரத்தில் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள் மாலைகளுக்கு தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து, மலர் மாலைகள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.