Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? இந்த ஆண்டு தரிசிக்க முடியுமா? பக்தர்கள் திக்... திக்.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? இந்த ஆண்டு தரிசிக்க முடியுமா? பக்தர்கள் திக்... திக்.

பதிவு செய்த நாள்

24 நவ
2026
10:11

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனு செய்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா, அல்லது கடந்த ஆண்டுகளைப் போலவே உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்படுமா, தீப தூணில் தீபம் ஏற்றுவதை இந்த ஆண்டு தரிசிக்க முடியுமா என பக்தர்கள் திக்... திக்... நொடிகளில் நேரத்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.


மலை மேல் வழக்கமாக கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தில், மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும். பாதுகாப்பு கருதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணை சுற்றிலும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த ஆண்டு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருந்தும் நேற்று இரவு வரை தீப மண்டபத்தை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. தீபத்தூணை சுற்றிலும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: தீர்ப்பின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்பு தீபத்தை நாங்கள் தரிசிக்க உள்ளோம். இதன்மூலம் வாழ்நாள் பயன் அடைந்துள்ளோம். இழந்த பெருமையை மீட்டுள்ளோம். நூற்றாண்டுகள் கனவு நிறைவேற போகிறது என நம்புகிறோம். இனிமேல் யாரும் சர்வே கல் என கூறாதீர்கள்; முருகனின் சாபம் பலித்து விடும்.


கடந்தாண்டு தி.மு.க., அரசு செய்த தடைகள், குறுக்கு வழிகளை த.வெ.க., அரசு கடைபிடிக்க கூடாது. ஹிந்துக்கள், பக்தர்கள், உள்ளூர் மக்களின் ஆன்மிக உணர்வுகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு தி.மு.க., அரசு தடை விதித்ததுடன், பொதுமக்களை மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கினர். இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஐந்து நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. தெருக்களில் தடுப்புகள் வைத்து மறித்தனர்.


பள்ளிகளுக்குகூட குழந்தைகள் செல்ல முடியவில்லை. பால் வாங்குவதற்கு கடைக்கு கூட செல்ல முடியாமல் போலீசார் தடை விதித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, இந்த ஆண்டாவது தீபம் ஏற்றுவார்களா அல்லது கடந்த ஆண்டுகளைப் போலவே தீபம் ஏற்றுவதற்கு தடை விதிப்பார்களா என இப்போதே பயம் தொற்றிக் கொண்டுள்ளது என்றனர்.


களத்தில் தினமலர்!


போலீஸ் பாதுகாப்புக்கு இடையே திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் தரிசனம்; 144 தடை உத்தரவால் மதுரை நிலை என்ன? 


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சுப்பிரமணியருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar