Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகனே.. அனேகனே.. திருவண்ணாமலையில் பரணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்: மாலை மகாதீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்: மாலை மகாதீபம்

பதிவு செய்த நாள்

24 நவ
2026
04:11

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை சாயரட்சை பூஜையில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று(நவ., 24) மாலை 6:00 மணிக்கு மகாதீபம், சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.


இக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவ.,18ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பரணி தீபத்தையொட்டி மாலை 5:30 மணிக்கு சண்முகர் அர்ச்சனை, யாகசாலை தீபாராதனைகள் நடந்தது. பின் யாகசாலையில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு சாயரட்சை பூஜையில் மூலவர் சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் நான்கு திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன.


தொடர்ந்து சண்முகர் தீபாராதனை, சின்னக்குமார சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல் நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, திருவாசகம் பாராயணம் நடந்தது. இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலுக்குள் மதியம் 2:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவர். மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின் சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார்.


பின் கோயிலின் நான்கு திசைகளில் தீபம் ஏற்றம் நடந்து, மாலை 6:00 மணிக்கு மலை மீது தீபஸ்தம்பத்தில் மஹாகார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்பின் சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கிறது. தங்கரத புறப்பாடு இன்று நடக்காது. மேலும் திருக்கல்யாண மண்டபத்தில் ‘கந்தனே உனை மறவேனே’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, முருகன் பிள்ளைத்தமிழ் பாராயணம் நடக்கிறது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலிலும் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar