Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜை ... முத்துப்பேட்டை ஹரிஹரசுதன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலம் முத்துப்பேட்டை ஹரிஹரசுதன் ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

25 டிச
2025
01:12

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 8 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் கே.சிவாநாத் தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சிதம்பரம் டிஎஸ்பி  டி.பிரதீப்  தலைமையில் பலத்த  போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலா உற்சவம் நடைபெறுகிறது.


வரும் ஜன.2-ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜன.3ம்  தேதி சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜன.5-ம் தேதி திங்கள்கிழமை ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலாளர் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar