திருப்புத்தூர் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2025 10:12
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் மற்றும் திருத்தளிநாதர் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுநேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மார்கழி உத்ஸவம் டிச.16ல் துவங்கி, தினசரி அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் தீபாராதனையை தொடர்ந்து உற்ஸவர் புறப்பாடு ஆகி சொர்க்கவாசல் எழுந்தருளினார். தொடர்ந்து சொர்க்கவாசலுக்கு பட்டாச்சார்யர்களால் பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 8:32 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார். பின்னர் கோயில் உட்பிரகாரத்தை மும்முறை வலம் வந்தார். பின்னர் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் ஊஞ்சலில் எழந்தருளி தீபாராதனை நடந்தது.
திருத்தளிநாதர் கோயிலில் அதிகாலை 4:15 மணிக்கு திருப்பள்ளி பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் யோகநாராயணப்பெருமாளுக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவருக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்ஸவ பெருமாள் திருநாள் மண்டபத்தில் அலங்காரத்தில் எழுந்தருளி ரமேஷ்குருக்கள், பாஸ்கர் குருக்களால் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் புறப்பாடாகி பெரிய பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எழுந்தருளினார். தொடர்ந்து சொர்க்க வாசலுக்கு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 7:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் கட்நது சென்றார்.பின்னர் திருவீதி உலா நடந்தது.