சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2025 01:12
சிறுபாக்கம்; சிறுபாக்கம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. நேற்று காலை 4:30 மணியளவில் கோ பூஜையுடன் துவக்கி, லட்சமி யாகம், மகா பூர்ணாவதி பூஜைகள் நடந்தது. பின், காலை 6:00 மணியளவில் 21 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடத்தி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.