லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2025 01:12
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் 18ம் ஆண்டு வைகுண்ட ஏகாதேசி விழா நடந்தது.விழாவையொட்டி காலை 5:00 மணியளவில் லட்சுமி நாராயண பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதிகாலை 5:30 மணியளவில் பரமபத வாசல் என்கிற சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவில் சி.மெய்யூர், சித்தலிங்கமடம், பல்லரிப்பாளையம், டி.எடையார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.