திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, மார்கழி பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, ஆகியவற்றிற்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் என பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. புத்தாண்டின் முதல் பிரதோஷம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.