மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 01:01
மேட்டுப்பாளையம் : மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் என்னும் வைபவம் நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் மனோன்மணி உடனமர் வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதியில் நடந்த வைபவத்தில் கால சந்தி பூஜை முடிந்து திரவியங்கள் கொண்ட மகா அபிஷேகம், சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது. தொடர்ந்து மனோன்மணி உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கல்யாண வைபவம் முடிந்து மங்கள ஆரத்தையும் நடந்தது. திருக்கல்யாண பிரசாதங்களாக பொதுமக்களுக்கு மஞ்சள் கயிறு மஞ்சள் கொம்பு மல்லிகைப்பூ வளையல்கள் மற்றும் குங்குமங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மகா அன்னதானமும் நடந்தது என அர்ச்சகர் ஜோ