வால்பாறை: வால்பாறையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலைக்கு சாலக்குடி வழியாக பாதயாத்திரையாக சென்றனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில் பாதயாத்திரை குழுவினர் சார்பில், ஆண்டு தோறும் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்த ஆண்டும் ஐயப்ப பக்தர்கள் குருசாமி ஏழுமலை தலைமையில், சபரிமலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் துவங்கிய பாதயாத்திரையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், ‘வால்பாறையில் இருந்து ஆண்டு தோறும் சபரிமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்கிறோம். வால்பாறையிலிருந்து, கேரள மாநிலம் அதிரப்பள்ளி, வாழச்சால் வழியாக திருச்சூர் சென்று, அங்கிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்கிறோம். தொடர்ந்து, 14 நாட்கள் பாதயாத்திரைக்கு பின், வரும், 15ம் தேதி சபரிமலையில் ஜோதி தரிசனம் செய்வோம்,’ என்றனர்.