எழுபது வயது பூர்த்தியன்று செய்யப்படுவது பீமரத சாந்தி. யமனுக்கு உக்ரரதம், ருத்ரரதம், பீமரதம், விஜயரதம் என்ற கோரைப் பற்கள் உண்டு. இந்த பற்களினால் நமக்கு ஆயுள்பங்கம் ஏற்படாமலிருக்க 59 வயதில் உக்ரரத சாந்தியும், 69 வயதில் ருத்ர ரத சாந்தியும், 70 வயதில் பீமரத சாந்தியும், 75 வயதில் விஜயரத சாந்தியும் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், நூறுவயது வரை நோய்நொடி இல்லாமல் வாழலாம் என்பது ஐதீகம்.