பிறர் பார்த்து பிரமிக்கும் விதமாக ஒன்று இருந்தால் திருஷ்டி தோஷம் உண்டாகி விடும். இதனைப் போக்குவது அவசியம். மிளகாய் வத்தல், உப்பு, நடைபாதை மண் ஆகிய மூன்றாலும் திருஷ்டி பட்டவர்களுக்கு வலமாக மூன்று முறையும், இடமாக மூன்றுமுறையும் சுற்றி நெருப்பில் போட வேண் டும். இதனை கண்ணேறு கழித்தல் என்பார்கள். திருஷ்டி என்பது தவிர்க்க முடியாதது. கழித்து விட்டால் பாதிப்பு உண்டாகாது.