கல்பாத்தி வேட்டைக்கொருமகன் கோவிலில் சாஸ்தாபிரீதி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 03:01
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி அருகேயுள்ளது வேட்டைக்கொருமகன் கோவில். இக்கோவில் மூலவர் பூரண புங்கலாம்பாள் சமேத ஹரிஹரபுத்திரர். இக்கோவிலில் எல்லாம் ஆண்டும் சாஸ்தாபிரீதி உற்சவம் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று காலை 6:00 மணிக்கு உஷ பூஜை, 8:00க்கு பூரணாபிஷேகம், 12:30 மணிக்கு சாஸ்தாம் பாட்டு நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு தீபாராதனை, 7:00க்கு கிரமார்ச்சனை, 8:00 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 9:30க்கு சாஸ்தாம் பாட்டு, 10:00 மணிக்கு உற்சவர் அஸ்வ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11:30க்கு நடந்த சிறப்பு தீபாராதனையோடு திருவிழா நிறைவடைகிறது.