Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை மாரியம்மன் கோவில் ... பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு பழநி முருகன் கோயிலுக்கு வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பீஹார் ராமாயண கோவிலில் நிறுவப்பட்டது 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பீஹார் ராமாயண கோவிலில் நிறுவப்பட்டது 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம்

பதிவு செய்த நாள்

19 ஜன
2026
02:01

மோதிஹாரி : பீஹாரில் கட்டப்பட்டு வரும் ராமாயண கோவிலுக்காக , தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய முப்பத்து மூன்று அடி உயர பிரமாண்ட சிவலிங்கம் , அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில் நிறுவப்பட்டது


பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பா . ஜ , - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது . இங்குள்ள கிழக்கு சம்பாரண் மாவட்டம் மோதிஹாரி அருகே கைத்வலியா கிராமத்தில் , மஹாவீர் மந்திர் அறக்கட்டளை சார்பில் பிரமாண்டமான விராட் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது. வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த இந்த கோவில் , உலகின் மிகப்பெரிய ராமாயண கோவிலாக உருவெடுத்து வருகிறது தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் அங்கோர்வாட் மற்றும் தமிழகத்தின் ராமேஸ்வரம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களின் வடிவமைப்பில் , ஐநூறு கோடி ரூபாய் செலவில் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது . இது , உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோவிலை விட மூன்று மடங்கு பெரிதாகும் . இந்தக் கோவிலில் , முப்பத்து மூன்று அடி உயர பிரமாண்ட சிவலிங்கம் நேற்று முன்தினம் நிறுவப்பட்டது


வே த மந்திரங்கள் ஒலிக்க , ராட்சத கிரேன்கள் உதவியுடன் பிரமாண்ட சிவலிங்கம் நிறுவப்பட்டது . அப்போது , ஏராளமான பக்தர்கள் , ஓம் நமசிவாய என்ற முழக்கங்களை எழுப்பி வணங்கினர் . மகா பலிபுரத்தில் உருவாக்கப்பட்ட இருநூற்று பத்து டன் எடை உள்ள இந்த சிவலிங்கம் , இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொண்ணூற்றாறு சக்கரங்கள் உடைய ராட்சத டிரைலர் வாயி லாக பீஹாரின் மோதிஹாரி கொண்டு வரப்பட்டது. விழாவில் , முதல்வர் நிதிஷ் குமார் , துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி , விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இது குறித்து , பீஹார் மாநில மத அறக்கட்டளை கவுன்சிலின் உறுப்பினர் சயன் குனால் கூறியதாவது


நிறுவப்பட்ட சிவலிங்கம் , ஒரே பாறையில் செதுக்கப்பட்டது . இதனால் , இது உலகின் மிகப்பெரிய சிவலிங்கமாக கருதப்படுகிறது . இந்த சிவலிங்கத்தில் , ஆயிரத்து எட்டு சிறிய சிவலிங்கங்கள் அடங்கியுள்ளன இதை வணங்குவதன் வாயிலாக , ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வணங்கிய ஆன்மிக பலனை பக்தர்கள் பெறுவர் . தமிழகத்தில் தயாரான இந்த சிலை , ஆந்திரா , மஹாராஷ்டிரா , மத்திய பிரதேசம் , உத்தர பிரதேசம் வழியாக மோதிஹாரியை அடைய நாற்பத்து ஐந்து நாள்களானது . விராட் ராமாயண கோவிலுக்கு , இரண்டாயிரத்து இருபத்து மூன்றில் அடிக்கல் நாட்டப்பட்டது . பிரதான கோவிலின் உயரம் இருநூற்று எழுபது அடியாக இருக்கும் . கோவில் வளாகத்தில் பதினெட்டு கோ புரங்களும் , பல்வேறு தெய்வங்களுக்கான இருபத்து இரண்டு சிறிய கோவில்களும் இருக்கும் ராமாயண கோவிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் , இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது . முழு கோவிலின் கட்டுமானப் பணிகள் இரண்டாயிரத்து முப்பதில் முடிவடையும் . இவ்வாறு அவர் கூறினார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar