செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு 27 ம் தேதி காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விக்ரகங்கள் கண் திறத்தல், சாமி கரிக்கோல ஊர்வலமும், 10.30 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம், மஹா கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜையும், காப்பு கட்டுதலும், யாகசாலை பிரவேசமும், முதல் கால பூஜையும் நடந்தது.
நேற்று காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 9.00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
மாலை 3 மணிக்கு 108 பால் குடம் அபிஷேகமும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.