கேரளா கும்பமேளா: இன்று அபூர்வ களரி அட்சரக்கால்’ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2026 11:01
பாலக்காடு; திருநாவாயா பாரதப்புழா நதியில் நடந்து வரும் கும்பமேளாவில், இன்று ‘களரி அட்சரக்கால்’ பூஜை நடக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ளது திருநாவாயா இங்குள்ள பாரதப்புழா (நிளா) நதியில் கும்பமேளா நடந்து வருகிறது. பிப். 3ம் தேதி கும்பமேளா நிறைவடையும் வரை தினமும் காலையில் நதியில் புனித நீராடலாம். கும்பமேளாவின் ஒரு பகுதியாக நேற்று மஹாநந்த ஸ்நானம் நடைபெற்றது. துர்க்கா தேவியையும் லட்சுமி தேவியையும் சமமான முக்கியத்துவத்துடன் பூஜை செய்து வழிபடுவது இதனின் சிறப்பம்சமாகும். இந்த நிலையில் இன்று கேரளாவில் முதன்முறையாக அபூர்வ ‘களரி அட்சரக்கால்’ பூஜை நடைபெறுகிறது. தசமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் இந்நாளில் கேரளாவில் பொதுமக்களுக்காக முதன்முறையாக அபூர்வமான ‘களரி அட்சரக்கால்’ (Kalari Aksharakkal) பூஜை நடைபெறுகிறது. இத்துடன் சிறப்பு சூரிய வழிபாட்டுடன் கூடிய நவகிரக பூஜையும், அதனைத் தொடர்ந்து ஹனுமன் பூஜையும் நடக்கிறது.
கும்பமேளா அமைப்பினர் கூறியதாவது: அபூர்வ ‘களரி அட்சரக்கால்’ சடங்கு ஆச்சார்யன்: வினோத் வைத்யார் களரி தேவதையின் அருளைப் பெறுவதற்காக, புனிதமான அட்சரங்களை (எழுத்துக்களை) பாதச்சுவடுகளாக களரித் தரையில் வரைந்து, தேவதையை ஆவாஹனம் செய்யும் அபூர்வமான மற்றும் பழமையான சடங்கே ‘களரி அட்சரக்கால்’ ஆகும். மகாமக மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் முதன்முறையாக பொதுமக்களுக்கு முன்னிலையில் நடத்தப்படும் இந்த பூஜை, கலையும் ஆன்மீகமும் இணையும் ஒரு அபூர்வ அனுபவமாக இருக்கும் என்றனர்.