சிறுமுகை அருகே பழத்தோட்டத்தில், மிகவும் பழமையான, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச தேரோட்டம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று கிருத்திகை பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு நடை திறந்து பாலாபிஷேகமும், கணபதி வேள்வி, மகா அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. கிச்சகத்தியூர் ஊர் பொதுமக்கள், பூஜையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். வருகிற 30ம் தேதி முருகப்பெருமான் ஊர்கள் தோறும் படி விளையாடுதல் வைபவம் நடைபெற உள்ளது. 31ம் தேதி அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடும், காவடி ஆட்டம் ஆகியவை நடைபெற உள்ளது. பிப். 1ம் தேதி காலை, 7 ஊர்களில் இருந்து, பக்தர்கள், பொது மக்கள் சீர்வரிசைகளை ஊர்வலமாக கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து, 10:30 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது. மாலை, 5:30 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிவசங்கரி மற்றும் சிறுமுகை உட்பட ஏழு ஊர்களின் பக்தர்கள், விழா கமிட்டியினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.