பதிவு செய்த நாள்
08
ஜன
2013
11:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி நீராட்ட உற்சவம் நேற்று துவங்கியது. விழாவையொட்டி,ஆண்டாள் ,பெரிய பெருமாள், மாடவீதி , கந்தாடை வீதி வழியாக கோபுர வாசலில், போர்வை களைதல் நிகழ்ச்சிநடந்தது. அரையர் பாட்டு, தீர்த்த கோஷ்டியும் நடந்தது. தொடர்ந்து,ஸ்ரீனிவாசன் சன்னதியில் தீபாராதனையும், எண்ணைய் காப்பு மண்டபம் சேர்தலும் நடந்தது. மாலையில், எண்ணெய்காப்பும், நீராடும் மண்டபத்தில் எழுந்தருலும், நீராட்டும் , வெள்ளி பந்து கொண்டு அம்மானை விளையாட்டும் நடந்தது. இரவில் , துளசி வாகனத்தில் ஆண்டாள் புறப்பாடும் நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன்,ஸ்தானிகம் ரமேஷ்,வேதபிரான் பட்டர் சுதர்சனன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.