Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பாரதப்புழா கும்பமேளாவில் இன்று ... பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் உத்சவம் கோலாகலம் பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் தைப்பூச திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் தைப்பூச திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2026
12:02

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக நடந்தது.


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா, கடந்த மாதம் 26ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. காலையும், மாலையும் யாகசாலை பூஜை மற் றும் திருவீதி உலா நடந்தது.


பத்து நாள் தைப்பூச திருவிழாவின், ஆறாம் நாளான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.


பகல் 12:30 முதல் 1:00 மணி வரை, தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடந் தது. இதில், விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலச பூஜை, பட்டு வஸ்திரம் சாத்துதல், தாரை வார்த்து கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.


பகல் 12:45 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை சமேதராய், கண்ணாடி மஞ்சத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருக்கல்யாண மொய்ப்பணமாக, 75,719 ரூபாய் வசூலானது. திருக்கல்யாண உற்சவத்தில், கோவில் தக்கார் ஜெயகுமார், கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றார். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடித்தல், இன்று மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
காரைக்குடி: குன்றக்குடி சண்முக நாதப் பெருமான் கோயிலில் தைப் பூசத்தையொட்டி நேற்று மாலை தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar