சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் 11ம் தேதி ஹனுமத் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2013 11:01
திருநெல்வேலி: நெல்லை அருகேயுள்ள ஜெய்மாருதி கோயிலில் ஹனுமத் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது. நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் 19வது ஆண்டாக ஹனுமத் ஜெயந்தி விழா வரும் 11ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அபிஷேக அலங்காரம், தீபாராதனை, ராம பஜனை நடக்கிறது. தொடர்ந்து ராமநாம பீட பிரதிஷ்டை நடக்கிறது.
வருஷாபிஷேகம்: ஜெய் மாருதி கோயிலில் ராஜகோபுர முதல் ஆண்டு வருஷாபிஷேக விழா வரும் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள்,அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தென்தமிழகத்தில் ஆஞ்சநேயருக்கு ராஜகோபுரம் 27 நட்சத்திரத்தை குறிக்கும் வகையில் 27 அடி உயர ராஜகோபுரமும், 12 லக்னத்தை குறிப்பிடும் வகையில் 12 அடி உயர ஆஞ்சநேயர் சிலையும், ராமபிரானின் பட்டாபிஷேக திருக்கோலமும் கொண்டு "ஸ்ரீராமஜெயம் பொறித்த செங்கல்களால் கோபுரம் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.