குன்றத்து கோயில் ராஜகோபுரத்தில் நியான் விளக்குகளுடன் புதிய வேல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2026 12:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் நியான் விளக்குகளுடன் புதிய வேல் அமைக்கப்படுகிறது.
ராஜ கோபுரத்தில் ஏற்கனவே 23 அடி உயரம் 6 அடி அகலத்தில் வேல் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேல் சேதமடைந்ததால் அதற்கு பதிலாக புதிய வேல் உபயதாரர் மூலம் அமைக்கும் பணி நடக்கிறது.
புதிய வேல் 36 அடி உயரம், 10 அடி அகலத்தில் ஆறு லைன் நியான் விளக்குகள், சிகப்பு நிற பின்புறம் கொண்ட தங்க நிற டியூப் லைட்டுகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பழைய வேலில் இருந்த லைட்டுகளை குரங்குகள் சேதப்படுத்தி வந்தன. இதனால் அடிக்கடி சீரமைக்கும் பணி நடந்தது. புதிதாக அமைக்கப்படும் வேலில் பாது காப்பு வலை பொருத்தப்படுகிறது.